1
இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று காலை 6.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், அருகில் உள்ள மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது.
எனினும், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.