9 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2014ஆம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போன ‘MH370‘ என்ற மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தை மீண்டும் தேடுவதற்கு அனுமதிக்குமாறு, காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற விமானமே திடீரென காணாமல் போயிருந்தது.
இதனையடுத்து மலேசியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நடத்திய தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதேசமயம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன் இன்ஃபினிட்டி என்ற நிறுவனமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
இந்நிலையில், குறித்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மீண்டும் தேடலைத் தொடங்க ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என்று மலேசிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.