தாய்லந்து தலைநகர் பேங்காக்கின் விமான நிலைய ஓடுபாதையில் மிகப் பெரிய யோகாசனப் பயிற்சி இடம்பெற்றது.
விமான நிலையத்தின் 3ஆவது ஓடுபாதை இன்னும் கட்டப்பட்டுவரும் நிலையில், யோகாசனப் பயிற்சியில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.
யோகாசனத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் விமான நிலையத்துக்கு வந்துள்ளதுடன், சூரியன் உதிக்கும்போது யோகாசனத்தை ஆரம்பித்தனர்.
தற்போது பேங்காக்கில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் அவர்கள் உற்சாகத்துடன் பயிற்சியில் பங்கேற்றனர்.
இதில் அதிகளவில் பெண்களே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.