புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஈரானில் அசம்பாவிதம்; விமான இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டு ஊழியர் உயிரிழப்பு

ஈரானில் அசம்பாவிதம்; விமான இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டு ஊழியர் உயிரிழப்பு

0 minutes read

ஈரானின் விமான நிலையத்தில் விமான இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தச் சம்பவம் குறித்த தகவலை JACDEC விமானப் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டது.

Chabahar Konarak விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த Varesh Airline விமானத்தை ஊழியர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த ஊழியர், போயிங் 737-500 ரக விமானத்தின் பாதுகாப்புப் பகுதியில் ஒரு கருவியை விட்டுச் சென்றதை உணர்ந்தார். பின்னர் அதை எடுப்பதற்காகத் திரும்பச் சென்றபோது, இயங்கிக் கொண்டிருந்த இயந்திரத்தால் அவர் உள்ளே இழுக்கப்பட்டார்.

ஊழியர் இழுக்கப்பட்டதும், இயந்திரம் தீப்பற்றிக்கொண்டதாக Bild செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்தப் பாதுகாப்புப் பகுதிக்குள் யாரும் உள்ளே செல்வதைத் தடுக்கத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஊழியரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து ஈரான் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More