உலக அளவில் ஏற்பட்ட இணையச் சேவைத் தடங்கலால் பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு Microsoft மற்றும் CrowdStrike தொழில்நுட்ப நிறுவனங்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்று மலேசியாவின் மின்னிலக்க அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
CrowdStrike நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட மென்பொருளில் கோளாறு ஏற்பட்டதால், உலகம் முழுவதும் Microsoftஇன் Windows அமைப்பைப் பயன்படுத்தும் கணினிகள் தடங்கலை எதிர்நோக்கின.
இணையச் சேவையில் தடங்கல் ஏற்பட்டதால் பல துறைகள் பாதிக்கப்பட்டன. மலேசியாவில் 5 அரசாங்க அமைப்புகளும் விமானம், வங்கி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இருக்கும் 9 நிறுவனங்களும் பாதிப்படைந்தன.
தடங்கல் குறித்த முழு அறிக்கை வேண்டும் என்றும் இத்தகைய சூழல் மீண்டும் நேராமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சி எடுக்கப்படவேண்டும் என்றும் Microsoft, CrowdStrike நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டதாக மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
தொடர்புடைய செய்தி : IT செயலிழப்பு; இங்கிலாந்தில் GPS,விமான நிலையங்கள், வங்கிகள் பாதிப்பு
நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதத்தைப் பரிசீலித்து அவற்றுக்கு நேர்ந்த பிரச்சினையைச் சரிசெய்ய உதவ முடியுமா என்பதை ஆராயும்படியும் Microsoft, CrowdStrike நிறுவனங்களிடம் மலேசியாவின் மின்னிலக்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.