தமிழர் ஒருவர் கனடாவில் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ரொரன்ரோ பொலிசார் இது தொடர்பிலான தகவலை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனர்.
அவ்வாறு காணாமல் போனவர் Arooran Sritharan என்ற 28 வயது இளைஞன் கடந்த 23ஆம் திகதி அன்று பகலில் கடைசியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் Port Union Rd + Lawrence Av பகுதியில் தான் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
சாதாரண உடல் வாகு கொண்ட Arooran Sritharan பழுப்பு நிற கண்கள் கொண்டவர் எனவும், ஷேவ் செய்யாமல் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் அணிந்திருந்த ஆடைகள் தொடர்பான விளக்கங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.Arooran Sritharan குறித்து தகவல் தெரிந்தால் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.