கொரோனா தொற்றுநோய் காரணமாக வேலையை இழந்த மக்களுக்கு வழங்கப்படும் அவசர உதவியை நீட்டிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுகாதார நெருக்கடியை மட்டுமின்றி பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்த நாடுகளே பொருளாதார சரிவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் வேலை இழந்த மக்களுக்கு வழங்கப்படும் அவசர உதவியை செப்டம்பர் 27 வரை நீட்டிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
புதிய நடவடிக்கைகளின் செலவு ஒரு வருடத்தில் 37 பில்லியன் கனேடிய டொலர்கள் ஆகும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
சுமார் 4.5 மில்லியன் கனடியர்கள், அல்லது மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் தற்போது ஒரு மாதத்திற்கு 2,000 டொலர் அவசர உதவியைப் பெறுகின்றனர்.
செப்டம்பர் 27ம் திகதிக்கு பின்னர், அவசர உதவி கோருபவர்கள் வேலையின்மை சலுகைகள் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலையின்மை சலுகைக்கு தகுதி பெறுவதற்கான விதிகளையும் தளர்த்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.