கனடாவில் பெண் ஒருவரைக் கரடி ஒன்று கடித்துக் குதறும் காட்சியை வீட்டுக்குள்ளிருந்து அவரது மகன் பார்த்துக்கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் உள்ள Buffalo Narrows என்ற கிராமத்தில் உள்ள மர வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக வந்திருந்த Stephanie Blais (44), தன் தந்தையான Hubert Esquirolஉடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த மர வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதால், அதை தன் கணவர் சரி செய்துகொண்டிருப்பதாக தொலைபேசியில் தன்னிடம் கூறிக்கொண்டிருந்த Stephanie, தன் மகன் Eliயிடம் (9) வீட்டுக்குள் போய் ஒரு ஆண்டென்னாவை எடுத்துவா என்று கூறியதாக தெரிவிக்கும் Hubert, அதற்குப்பின் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டதாகவும், அதுதான் தன் மகள் தன்னிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் என்கிறார்.
உண்மையில் நடந்தது என்னவென்றால், தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த Stephanieயை திடீரென கரடி ஒன்று தாக்கியிருக்கிறது.
அவரது கழுத்தை கரடி தாக்கியதால்தான் அவரால் தந்தையுடன் தொடர்ந்து பேசமுடியாமல் போயிருக்கிறது.
இதற்கிடையில், வீட்டுக்குச் சென்ற Stephanieயின் மகன் Eli, ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்பதை கவனித்து திரும்பிப் பார்க்க, அங்கே கரடி ஒன்று தன் தாயை தாக்குவதை பார்த்திருக்கிறான்.
உயிர் துடிக்க, தன் தாய் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த குழந்தையை அந்த கோரக் காட்சி, இனி கெட்ட கனவாக வாழ்நாளெல்லாம் அச்சுறுத்தலாம்.