எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கனடா நாட்டுக் குடியுரிமையை வீட்டில் இருந்துகொண்டே இணையம் மூலமாக 40 கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பெறலாம் என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதாவது, புதிதாக குடியுரிமை உறுதிமொழி செய்பவர்கள், நீதிமன்றம் செல்லாமலே அதற்கான உறுதிமொழியை இணையம் மூலமே செய்து கொள்ளலாம்.
குடியுரிமையை பெறுவதற்கான கால அவகாசம் நீடித்துச் செல்வதில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கே அந்நாட்டு அரசு மேற்படி அறிவித்துள்ளது.
எனினும், இந்த அறிவிப்புக்கு கனடா நாட்டைச் சேர்ந்த பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையானது, கனடா நாட்டு குடியுரிமையின் அர்த்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் விமர்சகர்கள் எச்சரித்து வருகின்றனர்.