சீனாவைச் சேர்ந்த ByteDance என்ற நிறுவனம், TikTok செயலியை உருவாக்கி, நிர்வகித்து வருகிறது.
இந்த செயலி மூலம் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருவதுடன், இந்தியா உட்பட சில நாடுகள், TikTok செயலிக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அரசுக்குச் சொந்தமான அலைபேசிகள் மற்றும் கணினிகள் உட்பட அனைத்துவிதமான தகவல் தொடர்பு உபகரணங்களில் இருந்தும், TikTok செயலியை நீக்க அமெரிக்க அரசு 30 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது.
இந்த 30 நாட்களுக்குள் செயலியை நீக்க, அனைத்துத் துறையினரும் ஒத்துழைக்க வேண்டுமென அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அமெரிக்கா முழுதும் TikTok செயலிக்கு தடை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவம், உள்துறை மற்றும் வெளியுறவுத் துறைகளில் பணியாற்றுவோர், TikTok செயலியை பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி – TikTokஇன் தனியுரிமை குறித்து கனடா விசாரணை