கூகுள் நிர்வாகிகளை, பாராளுமன்றக் குழுவின் முன் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு கனடா கோரியுள்ளது.
செய்தி உள்ளடக்கத்தை மறுவெளியீடு செய்வதற்கு கூகுல் பணம் செலுத்துவது தொடர்பில் முன்மொழியப்பட்ட சட்டம் தொடர்பில் பதிலளித்த சில கனடா பாராளுமன்ற உறுப்பினர்களில் செய்தி கட்டுரைகளுக்கான இணைப்புகளை கூகுல் தேடுபொறி அகற்றத் தொடங்கியமை குறித்த விசாரணைகளுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கனடா மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 4 சதவீதமானோருக்கு கூகுள் அதன் தேடல் முடிவுகள் மற்றும் அதன் “டிஸ்கவர்” அம்சத்தின் மூலம் செய்திகளுக்கான இணைப்புகளைத் தடுக்கத் தொடங்கியது, இது ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
சர்ச்சைக்குரிய மசோதாவின் தாக்கங்களை நன்கு புரிந்துகொள்வதற்காக கூகுள் நிறுவனம் இவ்வாறானதாரு சோதனை தடுப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
கூகுளின் இந்த நடவடிக்கை குறித்து பதிலளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “பத்திரிகையாளர்களுக்கு உண்மையில் பணம் கொடுப்பதை விட, கனடியர்கள் செய்திகளை அணுகுவதைத் தடுப்பதாக கூகுள் முடிவு செய்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அத்துடன், “இது ஒரு பயங்கரமான தவறு என்று நான் நினைக்கிறேன். மேலும், பத்திரிகையாளர்கள் அவர்கள் செய்யும் வேலைக்கு நல்ல ஊதியம் பெறுவார்கள் என்று கனடியர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் அறிவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.