கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் பிறந்தவர் தமிழ் அறிஞர் ஜி. யு. போப் (George Uglow Pope). கிறிஸ்தவ சமய போதகரான இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகத் தமிழுக்குச் சேவை புரிந்த இவருக்கு மெரினா கடற்கரையில் சிலை வைத்துக் கெளரவித்தது தமிழக அரசு.
இன்று இவருக்கு அவரது பிறந்த இடத்தில் நினைவுச்சின்னம் எழுப்பியுள்ளது கனடாத்தமிழர் பேரவை. தகவலையும், இப்புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்ட நண்பர் வரதீஸ்வரனுக்கு நன்றி.