ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 12 மணி நேரத்திற்குப் பின் சரிசெய்யப்பட்டது!!
பிரபல சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூன்றும் சில மணிநேரங்களாகச் சரியாக வேலைசெய்யவில்லை என உலகமெங்கும் இருந்து புகார்கள் எழுந்தன. மூன்றுமே தற்போது பேஸ்புக்கிற்குச் சொந்தமான சேவைகள் தான்.
உலகம் முழுவதும் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்களை பதிவிறக்கம் செய்யவோ, அனுப்பவோ முடியவில்லை என்று பல்லாயிரக்கணக்கான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இப்பிரச்சினை பெரும்பாலும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் நிகழ்ந்ததாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஃபேஸ்புக் தங்களது அதிகாரபூர்வப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? இது ஹேக்கர்களின் வேலையா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகள் இந்தப் பிரச்னை முழுவதுமாக தீர்க்கப்பட்ட பின்னே கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
இன்று அதிகாலை நேரத்தில் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழையபடி ஃபேஸ்புக் சேவைகளை வழங்கி வருகிறது. இதேபோல் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழையபடி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நன்றி-facebook