இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 சர்ஜிகல் ஸட்ரைக் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டனில் பாகிஸ்தானின் இராணுவத் தளபதி கமர் ஜாவித் பாஜ்வா மற்றும் செய்தித் தொடர்பாளர் லண்டனின் பிரபல வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளர். இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 சர்ஜிகல் ஸட்ரைக் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானொலி செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பாகிஸ்தானின் வலிமையை எவரும் தவறாக மதிப்பிட வேண்டாம். இனிமேல் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தினால் நாங்கள் 10 முறை அந்நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம்.
3.7 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீனாவுடன் பொருளாதார நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. இதனை பாதுகாக்கும் பொறுப்பு பாகிஸ்தான் இராணுவத்திடம் உள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விட்டால் பொருளாதார சக்தி மிக்க நாடாக பாகிஸ்தான் மாறும். எங்கள் நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது என்றும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய இராணுவம் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடவடிக்கை துல்லிய் தாக்குதல் என பொருள்படும். அதாவது ஆங்கிலாத்தில் இது “சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.