அமெரிக்காவில் மூன்று இந்தியர்கள் நீச்சல்குளத்தில் பிணமாக மிதந்தநிலையில் போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மிடில்செக்ஸ் கவுண்டி எனுமிடத்தில் பாரத் பட்டேல் என்ற 62 வயதான முதியவர், அவரது 33 வயதான மருமகள் நிஷா மற்றும் எட்டு வயதான பேத்தி ஆகியோர் உயிரற்ற நிலையில் தங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள நீச்சல் குளத்தில் மிதப்பதைக் கண்ட அண்டை வீட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மூவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அண்டை வீட்டார் தெரிவித்தனர்.நீரில் மூழ்கியது தற்செயலா என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.