அமெரிக்காவுக்கு 32.4 இலட்சம் டோஸ் கொவோவக்ஸ் கொவிட்–19 தடுப்பூசியை நுவக்சோவிட் என்ற வர்த்தகக் குறியின் கீழ் ஏற்றுமதி செய்ய இந்திய சீரம் நிறுவனத்துக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய உற்பத்தியாளர் ஒருவரால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தடுப்பூசியாக இது பதிவாகவுள்ளது.
கடந்த ஜூன் 29 அன்று அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில், சீரம் நிறுவன பணிப்பாளர் பிரகாஷ் குமார் சிங், அமெரிக்காவிற்கு கொவோவக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய அனுமதி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நொவாவக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கொவோவக்ஸ் தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருப்பதோடு சந்தைப்படுத்தல் அங்கீகாரத்திற்கான நிபந்தனையுடன் ஐரோப்பிய மருந்து நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.