2002 பெப்ரவரி 27 ஆம் திகதி கோத்ரா ரயில் எரிப்பில் 59 பேர் உயிரிழந்தனர். அதனை அடிப்படையாக கொண்டு வெடித்த கலவரத்தில் 790 இஸ்லாமியர்கள் 254 இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் 223 பேர் காணாமல் போனார்கள் 2500 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த தகவல் 2005 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த குற்றங்களுக்கு பலவிதத்திலும் காரணம் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திரநாத் மோடி என்று பெரும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுதுக்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம் சாட்டியிருந்தது .எனினும் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தால் கடந்த வருடம் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் குஜராத் இனப்படுகொலை தொடர்பாக பிபிசி ரகசிய விசாரணை ஒன்றை மேற்கொண்டு அதில் வெளிப்படை தன்மை ( மோடி முழு காரணி ) என்று முன்வைத்துள்ளது அந்த படம் கடந்த 17.01.2023 அன்று ” INDIA THE MODI QUETION ” என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டது. அதன் அடுத்த பாகமும் இந்த வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் இதை இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் 2021 கீழ் ஆனா அறிவுறுத்தல் பிரகாரம் யூடுப் மற்றும் ட்விட்டருக்கு கோரிக்கையை முன் வைத்ததன் விளைவாக இவை வெளியிட்ட அடுத்த நாளே நீக்கப்பட்டது.
தொடர்ந்தும் இந்த ஆவணப்படத்திற்கு ஆதரவாக எதிர் கட்சியும், எதிராக பாஜக அரசும் கொடி தூக்கியுள்ளது. அவர்கள் தம்மிடயே கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சசிகாந்த் செந்தில் இவ்வாறு கூறியுள்ளார் கலவரத்துக்கு முழு காரணம் மோடி என்று அன்றே வெளிப்பட்ட உண்மை ஆயினும் இதை பேசிய நபர்கள் இன்று உயிருடன் இல்லை அல்லது சிறையிலும் இருக்கலாம் இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டது எதுவும் தவறு இல்லை உண்மை என்றும் மேலும் இது ஒரு இனப்படுகொலை நடந்ததற்கான சான்று என்பது என் பார்வை இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை எப்படி எண்ணுகிறோமோ அப்படிதான் இந்த இனப்படுகொலை செய்தவரையும் காண்கின்றோம் . ஆனால் இந்த தவறை செய்தவர் இது தொடர்பில் துளியும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றார்.
மேலும் அவர் இந்த ஆவணபடத்தில் மோடியின் பிபிசி நேர்காணல் காணொளியொன்றும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் இங்கிலாந்து தொகுப்பாளர் “குஜராத் கலவரம் மனித உரிமை மீறிய செயல் என கேட்ட கேள்விக்கு” மோடி “மனித உரிமைகள் பற்றி நீங்கள் கற்று தார வேண்டாம்” என கூறியதுடன் ஆங்கிலேயர் இந்தியாவில் செய்த அடக்குமுறை பேசி தப்பித்து கொண்டது போல் இருந்தது என்கின்றார்.
ஆனால் மாறு பக்கம் பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி காங்கிரஸ் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சாடியுள்ளார்.மேலும் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிதம் பாக்சி இந்த ஆவணப்படமானது பிரசாரத்தின் ஒரு பகுதியே ( A Piece of propaganda ) ஒரு பக்க சார்பு , புறநிலை இல்லாமை மற்றும் காலணித்துவ மனநிலை என்று எதிர்த்து சொற்களை இறைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம் மீது வைக்கப்பட்ட குற்றத்தை உயர் நீதிமன்றமே தள்ளுபடி செய்து உள்ள நிலையில் ஆவணப்படத்தில் குற்றம் சாட்டியமைக்கு பாஜகவிடம் மன்னிப்பு கேளுங்கள் மனசாட்சியற்றவர்கள் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு வாத பிரதிவாதங்களை இடையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தை எப்படியாவது மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அரசியல் நோக்கில் காங்கிரசும் , சமூக நோக்கில் இந்திய மாணவர் அமைப்பும் பரப்பி வருகின்றனர் . ஆனால் வெளியிடங்கள், பல்கலைக்கழகங்களில் தடை விதித்துள்ளபோதும் இந்தியாவின் பல மாநிலங்களில் பார்க்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நேற்றைய தினம் சென்னை பல்கலையில் மடி கணனியில் திரையிடப்பட்டது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதை பார்வையிட்டனர்.
27.01. 2023 கேரளாவின் திருவானதா புறத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் திரையிட்டனர்.இந்தியாவின் மாணவர் கூட்டமைப்பு கொல்கத்தாவிலுள்ள பல்கலை வளாகத்திலும் பார்வையிடப்பட்டுள்ளனர்.
டெல்லி ,ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் பார்வையிட முயற்சி எடுக்க பட்டபோது மின் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மேலும் மடி கணணியை பயன்படுத்தி பார்க்கப்பட்ட போது அவர்கள் மீது கல் வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக பல அரசியல் குழப்பநிலையை நாடு முழுவதும் இவ்வாவணப்படம் ஏற்படுத்தியுள்ளது.