60 வயதை எட்டியமையால் கும்கி யானை ஒன்றுக்கு, மிகசி சிறந்த மரியாதையுடன் வனத்துறை அதிகாரிகள் ஓய்வு வழங்கியுள்ளனர்.
இது தொட்பிலான சுவாரஸ்யமான தகவல் இந்திய ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறன.
இதில் “கும்கி கலீம்” என்ற யானை, வனத்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்குச் சென்று, காட்டு யானைகளை விரட்டும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
இவ்வாறு 100 முறைகள் சென்ற கும்கி கலீம், ஒருமுறை கூட தோற்றது இல்லை என அதிகாரிகள் தெரித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பொள்ளாச்சி காட்டுப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த “அரிசி ராஜா” எனும் யானையைப் பிடித்து, வனத்துறையினருக்கு பெருமை சேர்த்தது கும்கி கலீம்.
தமிழ்நாட்டின் மக்களின் அடையாளமான கும்கி கலீம், தற்போது 60 வயதை எட்டியமையால் அதற்கு வனத்துறையினர் சிறப்பு மரியாதையுடன் நேற்று முதல் ஓய்வு அளித்துள்ளனர்.
இதேவேளை, கும்கி கலீம்மால் பிடித்துக்கொண்டு வரப்பட்ட “அரிசி ராஜா” உள்ளிட்ட சில யானைகள் தற்போது கும்கி யானைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.