கடந்த திங்கட்கிழமை (20) மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் துஆப்பிராத்தணையும் நேற்று (23) இரவு தாருஸபா அமையத்தின் தலைமையகத்தில் பிறை FM கட்டுப்பாட்டாளர் பஷீர அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது.
தாருஸபா அமையத்தின் தலைவர் மௌலவி ஷபா முகம்மத் அவர்களினால் துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், சமூக நல அமைப்புக்களின் முக்கியஸ்தர்களினால் நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போர தலைவர் றியாத் ஏ மஜீத், பொருளாளர் நூருல் ஹுதா உமர், உப தலைவர் எஸ்.அஸ்ரப் கான், எழுத்தாளர் முனை மருதவன் இப்ராஹிம், மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் புதல்வர் எம்.ஜே.எம். மின்ஹாஜ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் சகோதரர்கள், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், சமூக நல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.