0
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான UKயில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதாக UK அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், மற்ற நாடுகளில் பெரும் துயரத்தை அளித்து வருகிறது. இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்காவை தொடர்ந்து, UKயையும் கொரோனா அதிர வைக்கிறது. UKயில் பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ், UK பிரதமர் போரிஸ் ஜோன்சன், UKயின் சுகாதார அமைச்சர் உட்பட யாரையும் விட்டுவைக்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமான சூழலை அடைந்துள்ளதால், அங்குள்ள பேர்மிங்ஹாம் (Birmingham) விமான நிலையத்தை, 12 ஆயிரம் உடல்களை வைக்கும் தற்காலிக பிணவறையாகப் (Mortuary) பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
ஒரு களஞ்சியசாலை மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், 1ம் கட்டமாக 1,500 உடல்களை வைக்கும் அளவிற்கான பிணவறையாக மாற்றப்படவுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மட்டுமில்லாமல் , வேறு நோயால் இறப்பவரையும் வைப்பதற்கான தற்காலிகமான பிணவறை உருவாக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் பாதிப்பினால் அங்கு இதுவரை 759 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த புதன்கிழமை 475 ஆக இருந்த இந்த எண்ணிக்கை திடீரென உயர்ந்திருக்கிறது.
வணக்கம் இலண்டனுக்காக – ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்