இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவலின் வேகம் உச்சத்தில் இருக்கும் தற்போதைய தருணத்தில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கமுடியாது என கூறியுள்ளார்.
கொரோனா தொற்று குறித்தும், ஊரடங்கின்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்நாட்டு ஊடகங்களுக்கு பிரதமரின் பெயரில் அறிக்கை வெளியானது. அதில், கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அல்லது தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கானஆய்வில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகவும் ,உண்மையில், இதுபோன்ற மோசமான சூழ்நிலையில் ஒருபோதும் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.