தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில், சீன நிறுவனமான ஹுவாவேயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் 5ஜி வயர்லெஸ் இணைப்புகளை கட்டமைக்குமாறு, ஜப்பானை, பிரிட்டன் கேட்டுக் கொண்டுள்ளது.
ஹுவாவேய் நிறுவனத்திற்கு மாற்றாக ஜப்பானின் NEC Corp மற்றும் Fujitsu Ltd நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறும் அது அறிவுறுத்தி உள்ளது.
வரும் 2027 இறுதியுடன் ஹுவாவேய் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப உபகரணங்களுக்கு முடிவு கட்டுவதாக அறிவித்த 2 தினங்களில், பிரிட்டன் அதிகாரிகள், ஜப்பான் தொழில்நுட்ப அதிகாரிகளை சந்தித்து இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால், ஹுவாவேயின் சேவைகள் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்லாந்து, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் உள்ள ஹுவாவேய் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களிடம் இருந்து 5 ஜி தொழில்நுட்பம் பெறப்படும் என பிரிட்டன் டிஜிட்டல் துறை அமைச்சர் ஆலிவர் டவ்டன் (( Oliver Dowden)) கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.