கடந்தாண்டு டிசெம்பர் மாதம், லண்டன் – ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கிய போது, அதிலிருந்த பணிப் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணித்தார்.
ஏர் அல்பேனியாவுக்குச் சொந்தமான விமானம் ஒன்றே தரையிறங்கிய போது, அந்த விமானத்தில் இருந்த கிரேட்டா டைர்மிஷி என்ற (24 வயது) இளம் பெண்ணே இவ்வாறு மரணித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், அப்பெண்ணுக்கு அரிய வகை நோய் இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, கிரேட்டாவின் மரணத்துக்கு மாரடைப்புக் காரணமில்லை என்பதை உடற்கூறாய்வு அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
அத்துடன், கிரேட்டாவுக்கு ‘ வயது வந்தோருக்கான திடீர் இறப்பு நோய்’ (sudden adult death syndrome) என்ற நோய் பாதிப்பு இருந்தமையினாலேயே அவர் மரணித்துள்ளார்.
எனினும், அவர் மரணிக்கும் வரை அவருக்கு அந்த நோய் இருப்பது குறித்து அவரோ, அவரது குடும்பத்தினரோ அறிந்திருக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளன.