எவராலும் எதிர்க்கப்பட முடியாத, முறியடிக்கப்பட முடியாத அரசியல் அதிகாரம் ‘இறையாண்மை’ ஆகும்.
வடக்கு அயர்லாந்துக்கான புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம், வடக்கு அயர்லாந்தின் இறையாண்மையை மீட்டெடுக்கிறது மற்றும் பாதுகாக்கிறது,” என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.
வடக்கு அயர்லாந்துக்கான புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து, இங்கிலாந்து பிரதமர், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் நேற்று இறுதி பேச்சுவார்த்தையை நடத்தினார்.
இது குறித்து பிபிசி செய்திக்கு இன்று அளித்த பேட்டியிலேயே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “வடக்கு அயர்லாந்துக்காக புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் என்பது இதயத்தில் கைகோர்ப்பது ஆகும். அது பல பிரச்சினைகளைத் தீர்க்கும். அத்துடன், பாதுகாப்பானதாகவும் அமையும்” என்றார்.
பிரெக்ஸிட் ஒப்பந்தமானது, கிரேட் பிரித்தானிய மற்ற பகுதிகளிலிருந்து வடக்கு அயர்லாந்துக்குள் நுழையும் போது சில பொருட்களை சரிபார்க்கிறது.