மின்சார கட்டண உயர்வால் இங்கிலாந்து பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது கீரை, தக்காளி, வெள்ளரிகாய், ப்ரோக்கோலி, குடை மிளகாய் மற்றும் காலிஃபிளவர் மரக்கறிகளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தக்காளி மற்றும் வெள்ளரி போன்ற மரக்கறிகள், ஒருவருக்கு ஒரு கிலோகிராம் மாத்திரமே வழங்கப்படுகிறது.
மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் பெரும்பாலான பசுமைக் குடில்களில் மரக்கறிகளின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளதாகவும் தெற்கு ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவில் இருந்தும் மரக்கறிகளுக்கு விநியோகம் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆபிரிக்காவில் ஏற்பட்ட புயல் மரக்கறிகளின் விளைச்சலை பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு பருவநிலை மாற்றம், எரிசக்தி விலையேற்றம் மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சினை ஆகியவை இங்கிலாந்தில் மரக்கறிகளின் தட்டுப்பாட்டுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
எனினும், ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதே (Brexit) இந்தத் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.