வின்ட்சர் கோட்டைக்கு அருகிலுள்ள 17ஆம் நூற்றாண்டைக் கொண்ட ஃபிராக்மோர் வீட்டிலிருந்து (Frogmore Cottage) வெளியேறும்படி, இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை, இளவரசர் ஹரி மற்றும் மேகனின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் பக்கிங்ஹாம் அரண்மனை இது குறித்து எவ்விதக் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
ஹரியின் சுயசரிதையான ஸ்பேர் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, இந்த நடவடிக்கைக்கு, மன்னர் சார்லஸ் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 படுக்கை அறைகளை கொண்ட ஃபிராக்மோர் வீடு, Grade-II பட்டியலிடப்பட்டுள்ளது. இது மறைந்த ராணியின் அரச தம்பதியினருக்கு பரிசாக இருந்துள்ளது.
ஹரி மற்றும் மேகன் தம்பதியினர், தற்போது தங்கள் இரு குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர்.
அவர்கள் 2020இல் அரச குடும்பத்து வாழ்க்கையை துறந்து, சிறிது காலத்துக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.