இளவரசர் ஹரி தனது குடும்பத்தினரிடையே “எப்போதும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன்” என்றும், மறைந்த அவரது தாயாரும் அவ்வாறே உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
எழுத்தாளர் டாக்டர் கபோர் மேட் உடனான கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற ஹரி, “என் வாழ்நாள் முழுவதும், என் இளமைப் பருவத்தில், என் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு இடையே நான் சற்று வித்தியாசமாக உணர்ந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இளவரசரின் உணர்ச்சிகள், சிகிச்சை மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் தொடர்பான கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால், ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர், ஃப்ரோக்மோர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை அல்லது அவர் தனது தந்தையின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது போன்ற அண்மைய அரச குடும்ப சர்ச்சைகள் தொடர்பில் பேசப்படவில்லை.