வாராந்த கேள்விகளுக்கு பதிலளித்து, வெளியிடும் ஊடக அறிக்கையிலேயே வடமாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் இணைவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், புலம்பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்த அச்சப்பட்டு நின்றதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தன்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடனே இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.