நுவரெலியா – ராகல பகுதியிலுள்ள குகையொன்றிற்குள் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் ராகல – சென்லேனாட்ஸ் பகுதியை சேர்ந்த 31 வயதான செல்லையா அசோக் குமார் மற்றும் 29 வயதான மகேஷ்வரன் ரத்னேஷ்வரன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவர்கள் இருவரும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்று வீட்டிலிருந்து சென்றுள்ளனர்.
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகைக்குள், அவர்களுடன் சென்ற நாயும் உயிரிழந்துள்ளமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முள்ளம்பன்றியொன்றை வேட்டையாடச் சென்ற குறித்த இருவரும், குகைக்குள் புகை விசிறியதன் பின்னர் உட்பிரவேசித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.