இந்திய படையினரின் தன்னாதிக்கத்திற்கு எதிராக 1987 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் 15 ஆம் திகதி யாழ் நல்லூர் பகுதியில் வைத்து தமிழீழ வரலாற்றில் தேச விடுதலைப்போராட்டத்திற்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.
தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டமானது 12 நாட்கள் தொடர்ந்து 1987.09.26 ஆம் திகதி மரணித்தார் இன்றிலிருந்து ஈழ போராட்ட வரலாற்றில் திலீபன் தியாக தீபம் என பெயர் சூட்டப்பட்டு வருடா வருடம் புரட்டாசி மாதம் 26 ஆம் திகதி வடகிழக்கு பகுதிகளில் மிக பிரமாண்டமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இவ்வருடத்திற்கான 31 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வானது திருக்கோவில் அத்தியடி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடாத்தப்பட்டு அதன் பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினரினோ காரியாலயத்தில் திலீபனின் திருவுருவப் படம் எடுத்துச்செல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்க உறவுகளினால் அகல்விளக்கேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி இரங்கலுரை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(மட்டக்களப்பு செய்தியாளர் டினேஸ்)