செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் மக்களின் மனங்களை நல்லாட்சி அரசாங்கம் வெல்லமுடியும்?

தமிழ் மக்களின் மனங்களை நல்லாட்சி அரசாங்கம் வெல்லமுடியும்?

2 minutes read

 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் தாயகமெங்கும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது .யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நான்காவது நாளாக நடைபவனியினை மேற்கொண்டுவருகின்றனர் அதனை விட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மல்லாவி பிரதேச வணிகர்கள் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்குமகஜர் ஒன்றினை துணுக்காய் பிரதேச செயலாளர் இ பிரபாகரமூர்த்தி ஊடாக அனுப்பிவைத்தனர்

இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு

போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளும் பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளாகவும் விடுதலைசெய்யப்படவேண்டும் என வர்த்தகர்க சங்கந்கத்தினராகிய நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்..

போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பயங்கரவாதாம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் அரசியல் கைதிகளை சிறையில் வைத்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாததொன்றாகும்.

நல்லாட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி பலதடவைகள் கைதிகள் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன் என கூறியிருந்ததை இங்கு நினைவு படுத்துகின்றோம்.

சிறையில் வாடும் அரசியல் கைதிகள் 28 நாட்களாக உண்ணாவிரம் இருந்து அணுஅணுவாக நாளுக்கு நாள் செத்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் சொல்லப்போகும் பதில் என்ன?

இலங்கை சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தாமும் வாழ்வதற்காகவே போராடுகின்றார்கள் அவர்களை இழந்த குடும்பங்கள் பெற்ற பிள்ளையை பரிந்த தாய் கணவனை பிரிந்த மனைவி என உறவுகளை இழந்த நிலையில் தவிக்கும் குடும்பங்களுக்கு சரியானதொரு தீர்வினை அரசாங்கம் வழங்கவேண்டும் என நாங்கள் எதிர்பாக்கின்றோம்.

வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை பக்கசார்பற்ற விசாரணை மூலம் கண்டறியப்பட்டு ஆண்டுக்கணக்காக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுகு;கு தக்கபதிலை நல்லாட்சி அரசாங்கம் வழங்க உடனே நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற உண்மையை கண்டறிந்து அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு உரியபடி நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுதலை செய்யவேண்டும்.

மக்களை பாதுகாப்பதே அரசின் கடமையாகும் போராடிக்கொண்டு கண்ணீரூடன் துன்பப்பட் வாழ்வை கழித்து வரும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் காணாமல் செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் வாழ்த்து வருகின்றார்கள்

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் அவர்களுக்குசரியான தீர்வொன்றை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களை நல்லாட்சி அரசாங்கம் வெல்லமுடியும் என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

எனவே காலம் தாழ்த்தாது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு செவிசாயத்து அவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து உரிய தீர்;வை வழங்குவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி தொடரவேண்டும் என வர்த்த சங்கத்தினர் என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றோம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் லண்டனுக்காக முல்லைத்தீவு செய்தியாளர் சண்முகம் தவசீலன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More