காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக குழந்தைகளுடன் வெயில் மழை பனி பாராது வீதியோரத்தில் நுளம்புக்கடிக்குள் கிடக்கும் எமது காணி விடுவிப்பு குறித்து பேசாது ஏனைய காணிகள் விடுவிப்பு தொடர்பில் விடுவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் கேப்பாபுலவு மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சுபீகரித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் 600 நாட்களை அண்மித்து கேப்பாபுலவு இராணுவ தலைமையக வாயிலுக்கு முன்னால் தொடர்கின்றது.
இந்நிலையில் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக இன்று மாலை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினர்
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் இந்த நல்லாட்சி அரசு காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக குழந்தைகளுடன் வெயில் மழை பனி பாராது வீதியோரத்தில் நுளம்புக்கடிக்குள் கிடக்கும் எமது காணி விடுவிப்பு குறித்து பேசாது ஏனைய காணிகள் விடுவிப்பு தொடர்பில் விடுவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு அழுகிற குழந்தைக்கு பால்குடுக்காது இருப்பது போன்றது என விசனம் வெளியிட்டுள்ளனர்
அத்தோடு இன்றுவரை நாம் தொடர்ந்து போராடிவருகிறோம் நேற்று உலக உணவு தினம் ஆனால் நாங்கள் உணவுகள் கூட இல்லாது வீதியுரத்தில் இருந்து போராடுகிறோம்
அண்மையில் ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்ட செய்தி கடந்த பத்துவருடமாக போராடிவரும் எமக்கு மகிழ்வை தந்தது டிசம்பர் 31 ற்கு முன்னர் இராணுவத்தால் சுபீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என்று. ஆனால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள செய்தியானது எம்மை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது இன்னும் நாங்கள் எத்தனை வருடங்கள் இதிலே வாழ்வது இந்த காணியை மீட்பதற்காக எவளவு காலம் தெருவோரத்தில் இருக்கபோகிறோம் எமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது அதேநேரம் பிள்ளைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது எங்களுக்கும் தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்படுகிறது சர்வதேசமும் இதனை பார்த்துக்கொண்டிருக்கிறது அதேநேரம் இன்று ஜனாதிபதியில் அறிவிப்பு காணிகள் முழுமையாக விடுவிப்பதாக காட்டிக்கொண்டு சொற்ப காணிகளை விடுவித்துவிட்டு ஜெனீவாவில் மார்ச் மாதம் நடக்கும் அமர்வில் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையாக இதை செய்யபோகிறது என்று தெரிவித்தனர்
(எமது முல்லைத்தீவு செய்தியாளர் சண்முகம் தவசீலன்)