முள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தமிழினத்தின் மீது கடந்த அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையில் துயரத்தை நினைவுகூரும் துயர்மிக்க நாள் மே 18.
மூன்று தசாப்தகால சரித்திரப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் சமாதிகட்ட முன்னெடுக்கப்பட்ட மனிதகுலத்திற்கு விரோதமான சம்பவங்களின் வடுக்கள் காலத்தால் அழியாதவை.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
10ஆம் ஆண்டு நினைவு தினமான இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை 10.30 மணிக்கு அக வணக்கத்துடன் நினைவஞ்சலி ஆரம்பமாகி 10.32 மணிக்கு முள்ளிவாய்க்காலில் யுத்தத்தில் தாயாரை இழந்து நிர்க்கதியாக உள்ள சிறுமி ஒருவர் பிரதான பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.