0
27 ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அனுராதபுரம் தந்திரிமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பப்பாசி தோட்டத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே அவர் இவ்வாறு ஆடுகளை விஷம் வைத்து கொலைசெய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.