யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இராணுவத் தளபதி நாளை (வெள்ளிக்கிழமை) காலை நல்லூர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் பலாலி உயர் பாதுகாப்பின் பழைய பகுதிகளையும் பார்வையிடவுள்ளார்.
அண்மையில் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வாவுக்கு எதிராக சர்வதேச நாடுகள் மற்றும் பொது அமைப்புக்களும் பலத்த எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவரது வருகையின் போது யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இவரது நியமனத்தை ஈழத் தமிழர்களும் எதிர்த்து வருகின்றனர்.