தமிழீழ விடுதலைப்புலிகளின்புரட்சி பாடல்களை ஒலிபரப்ப முயன்ற நபர் கைதுசெய்யப்பட சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை – அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசார கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிலையில் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல் ஒலிக்கப்பட்டதாக தெரிக்கப்படுகின்றது.
அதுதொடர்பாக காவல் துறைக்கு கிடைத்த தகவலுக்கமைய கூட்டத்துக்கான ஒலி ஏற்பாடுகளை செய்திருந்த இளைஞர்கைது செய்யப்பட்டுள்ளார்.