கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக ஆராய விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள் சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, சுகாதாரம், குடிநீர் வீடுகள், குளங்களின் நிலை உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.
தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக சந்திப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றம் கம்பெரலிய திட்டம், வீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.