வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா – தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 1010 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20, 30, 38 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.