விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கடலாமை இறைச்சியுடன் பூநகரியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இலங்கையில் கடல் ஆமைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது.
கடற் தொழிலில் ஈடுபட்டபோது மீனவரின் வலையில் சிக்கிய குறித்த கடலாமையை கடற்கரையில் இறைச்சிக்காக தயார் படுத்திக்கொண்டிருந்த நிலையில் பொலிசார் சந்தேக நபரை கைது செய்யதுடன், இறைச்சியையும் மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் பூநகரி பள்ளிக்குடா பகுதியில் இடம்பெற்றள்ளது. பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பூநகரி பொலிசார் இறைச்சியை மீட்டதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் சம்பவம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளனர்.