1

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1008வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம் சர்வதேசம் உடனடியாக பதில் கூற வேண்டும் எனக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
முல்லைத்தீவு ராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைந்தது
இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு, திருகோணமலை ,அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு, திருகோணமலை ,அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.
குறித்த உறவுகளின் போராட்டத்தில் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர். அந்தவகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டம் மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வருகைதந்து மக்களிடம் ஐக்கிய நாடுகளுக்கான மகஜரினை பெற்றுக்கொண்டு அதனை உரிய தரப்பினரிடம் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட உறவுகள் சர்வதேசமே இலங்கை அரசை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து ,தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் இன்று கீரோக்கள் ,சர்வதேசமே எமக்கு நீதி பெற்று தா ,கடத்தாதே கடத்தாதே எமது உறவுகளை இனியும் கடத்தாதே ,இரவோடு இரவாக ஓ எம் பி ஐ அமைத்து இலங்கை எதை சாதிக்க நினைக்கிறது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்படட பதாதைகளை தங்கியவாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே ,வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் ,வேண்டாம் வேண்டாம் ஓ எம் பி வேண்டாம் ,புதிய அரசே எமது உறவுகள் எங்கே என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் போராடடத்தில் ஈடுபட்டிருந்தனர்.