திருகோணமலையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 13 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை – நிலாவௌி வீதி, மூன்றாம் கட்டை பகுதியைச் சேர்ந்த வி.கிஷோபிதா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 1733 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வார காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 136 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.