6
இலங்கை தேயிலை புத்துயிர் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேயிலைத்துறையை ஒரு நிலையான மற்றும் போட்டித்தன்மை மிக்க துறையாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.