அஸர்பைஜானின் மேற்கிலுள்ள கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் (Caspian University) கல்வி பயின்ற இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அஸர்பைஜானில் மாடி வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
21, 23 மற்றும் 25 வயதான மூன்று மாணவிகளே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மின் ஒழுக்கு காரணமாக குறித்த மாடி வீட்டில் தீ பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த தீ விபத்து தொடர்பில் அந்நாட்டு தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.