நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் சிறந்த எதிர்காலம் ரணில் விக்ரமசிங்கவின் வெளியேற்றத்தில் தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனை அவர் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சியின் தலைமை பதவியில் இருந்து ரணிலை விலக்கவே பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.இன்னொரு சாரார் ரணில் உயிரோடு இருக்கும் வரை தலைவராக இருக்க வேண்டுமென எண்ணுகின்றனர். ஆனால் தான் அவ்வாறு விரும்பவில்லை என்றும் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் பெரும்பான்மையானவர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருப்பதால் கட்சியின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று தா ங்கள் கோருதாகவும்
அதையே அழகாக அவர் ஒரு புதிய தலைவர், ஒரு புதிய தலைமைக் குழு மற்றும் புதிய கொள்கைகளை முன்வைக்கும் வாய்ப்பை வழங்குங்கள் என்றே கோருகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.