இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று, எதிர்வரும் 31 மற்றும் எதிர்வரும் 2, 3 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.