அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் விழுந்து மூன்று பேர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவிசாவளை சீத்தாவக்கை பகுதியில் கைவிடப்பட்ட சுரங்க குழிக்குள் விழுந்தே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
குழிக்குள் விழுந்த இரண்டு கோழிகளை காப்பாற்ற சென்ற போதே இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு ஏற்பட்டுள்ளது.17, 25 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.