இந்த வருடத்தின சர்வதேச தாய்மொழி தின கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தேசிய நூல் நிலையத்திலும் சுவடிகள் சேவை சபையின் கேட்போர் கூடத்திலும் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. சமூகத்தில் பல்வேறு தரப்பினர் எழுதும் மற்றும் பேச்சுத் துறையில் பயன்படுத்தும் மொழி நடைமுறையினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்பொழுது கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் கவனம் செலுத்தி புத்திஜீவிகள் உரைகளை நிகழ்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.