கடும் வறட்சியுடனாக காலநிலையையடுத்து தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களுக்கு நீரை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட குடிநீர் மூலங்களில் நீரின்மையே இதற்கு பிரதான காரணமாகும்.
விசேடமாக மேல்மட்ட பிரதேசங்களில் உள்ள நீர்பாவனையாளர்களுக்கு நீரை விநியோகிக்கும் போது குறைந்தளவு நீரையே வழங்க முடிகின்றது. பல்வேறு பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக நீரை வழங்க முடியாதுள்ளது. இது தொடர்பில் அறிவிப்பதற்கு குறுந்தகவல் சேவையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீர்பட்டியலில் உள்ள கணக்கிலக்கத்தை குறிப்பிட்டு 071 9 399 999 எனும் கையடக்க தொலைபேசி இலக்கம் ஊடாக குறுந்தகவல்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்துக்கொள்ளமுடியும். இலவசமாக மேற்கொள்ளப்படும் இந்த குறுந்தகவல் ஊடாக நீர்பட்டியல் மற்றும் அது தொடர்பான தகவல்களை பெற்று கொள்ள முடியுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.