களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தியிருந்த CCTV கமெராக்களை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிக்கு ஒருவரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு நிமித்தம் பொருத்தப்பட்டிருந்த 14 CCTV கமெராக்களை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருசிலர் அனுமதியின்றி அகற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.