தங்க ஆபரண தயாரிப்பாளர்களுக்கு நிவாரண விலையில் தங்கத்தை பெற்றுக்கொடுக்கும் வேலைதிட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபைக்கு தீர்வை வரியுடன் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகார சபையின் பரிந்துரையின் கீழ் தங்க ஆபரண தயாரிப்பாளர்களுக்கு நிவாரண விலையில் தங்கத்தை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கபடுமென அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தங்க ஆபரண தயாரிப்பாளர்களின். தேசிய மாநாட்டில் கலந்து கொண்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.